வள்ளலாரின் கருத்துக்களை, பாடல்கள் வழியாக வெளிப்படுத்தும் நுால்.
அளவாக உண்பதும், காலைக்கடன்களை முறைப்படி முடிப்பதும் முக்கியம் என வலியுறுத்துகிறது. பெரும்பாலான பாடல்கள், காலைக் கடனை முறையாக கழிப்பதை முக்கிய செயலாக சொல்கின்றன. பிழையில்லாமல் அறம் உணர்ந்து வாழ்பவர்க்கு உழைப்பே வழிபாடு என்ற உன்னத உண்மையை வெளிப்படுத்துகிறது.
அறம் உணர்ந்தும், ஏழ்மையில் வாடுவதை ஊழ்வினை என்று ஏற்க மறுத்து வாதிடுகிறது. அருள்பெற்ற செல்வர்களுக்கு எப்போதும் இறப்பில்லை என்பதை சத்திய வார்த்தையாக முன் மொழிகிறது.
மாமிசம் உண்ணாதே என போதிக்கிறது. நோயற்ற நெடுவாழ்வுக்கு வழிகாட்டுகிறது. வாழ்வில் ஆறு சுவைகள் பற்றியும் விளக்கமாக தெரிவிக்கும் நுால்.
– சீத்தலைச்சாத்தன்