சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படைக்கு உரை விளக்க நுால்.
காகிதச் சுவடியில் பெறப்பட்ட கவிப்பெருமாள் உரை, நுாலாக்கம் செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் பகுதிகளை மேம்படுத்தி மூலப்பாடல்களில் உள்ள பதவுரை போன்றே அமைக்கப்பட்டுள்ளது. பாடல்களுக்கு எண்கள் தந்து நிரல் படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
உ.வே.சா.,வின் மூன்றாம் பதிப்பு துணை கொண்டு உரைப்பகுதியில் பாடற்சொற்களில் செய்யப்பட்ட திருத்தமும் குறிக்கப்பட்டுள்ளது. வேண்டிய இடங்களில் நச்சினார்க்கினியர் உரையும் எடுத்தாளப்பட்டு உள்ளது. ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு