இயற்கை வளம் ஏராளமாக இருந்தும், தமிழக மக்கள் வறுமையில் சிக்கித் தவிப்பதை அலசி ஆராயும் நுால். மக்களை ஆட்டிப்படைக்கும் பொறாமை, சுயநலம் நீங்க தீர்வு காணும் சிந்தனையை முன் வைக்கிறது.
இளைஞர் ஆற்றல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த, ‘மூன்றாவது கண் கல்வி’ என்ற படிப்பறிவை உயர்த்துவது பற்றி ஆலோசனை தருகிறது. சுயதொழில், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அயரா உழைப்பு, நேர்மையுடன் வாழ்தல் என்ற அடிப்படைகளை கல்வியின் பயன் என கூறுகிறது.
தன்னை அறிவதே முதல் வெற்றி என வழி காட்டுகிறது. வாசிப்பே, கற்பனை ஆற்றலை வளர்க்கும் என உறுதி செய்கிறது. சமுதாயம் பற்றி சிந்தித்து தீர்வு காணும் வழிமுறைகள் நிறைந்த நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்