புதுச்சேரி கவிஞர் வாணிதாசனின் படைப்புகளை திறனாய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
தமிழ்ப்பற்று, இயற்கை வருணனை, பெண்ணியப் பார்வை, காதல் உணர்வு, பகுத்தறிவுச் சிந்தனை, பொதுவுடமை மற்றும் சமூக மேம்பாட்டுக் கருத்தோட்டங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. பல்வகைப் பொருண்மைகளில் படைப்புகளை நுணுகி ஆய்ந்துள்ளது.
மாறுபட்ட கோணத்தில் கவிதைகள் அலசப்பட்டு உள்ளன. கட்டுரைகளில் காட்டப்படும் குறிப்புகள், வாணிதாசன் படைப்புகளை படிக்கத் துாண்டுகின்றன. சமத்துவக் கண்ணோட்டம், சீர்திருத்தச் சிந்தனைகள் படைப்புகளில் இருப்பதை காட்டுகிறது. மொழியாக்க படைப்புகளையும் குறிப்பிடும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு