சமூக வலைதளத்தில் வீடியோக்களை ரசித்து பார்க்கும் நம்மை மாற்ற, இந்த புத்தகம் ஒரு முயற்சியாக இருக்கும். 5 முதல் 10 நிமிடங்களில் படித்து முடிக்கக்கூடிய 20 சிறுகதைகள் அடங்கியுள்ளன. கதைகளில் வரும் சம்பவங்கள், பல இடங்களில் சந்திப்பவைதான். கதாபாத்திரங்கள் நமக்கு தெரிந்தவர்கள்தான். எனினும் அக்கதைகளை படிக்க வேண்டும் என்பதற்கான விடையாக இப்புத்தகம் இருக்கும். கதைகளைப் படித்து முடித்ததும், அட இது நல்லாயிருக்கே’ என்பீர்கள்.