கவரும் விதமாக படைக்கப்பட்டுள்ள நாவல் நுால்.
ராஜா – ரோஜா காதல் உணர்வுபூர்வமான சம்பவங்களுடன் நீண்டு, இறுதியில் என்ன ஆகிறது என்பதை தெளிவாகச் சொல்கிறது. அவள் இல்லாமல் நான் இல்லை என பறைசாற்றுகிறது. கதையில் திடீரென நாடகத்தனமாக கதாபாத்திரங்களுக்கு பெயர் சூட்டி வசன நடையில் பேசுவது சற்று வித்தியாசமாக இருக்கிறது. இடம்பெற்றிருக்கும் படங்கள் தனித்துவத்துடன் அர்த்த பூர்வமாக இருக்கின்றன.
சமுதாயத்திற்கு ஏற்றவனாக இருக்க வேண்டியதை ராஜா கதாபாத்திரம் எடுத்துச் சொல்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறியத் துாண்டும் விதமாக அமைந்திருக்கிறது. ஆற்றொழுக்கு போலான கதை சொல்லல் முறை சுவாரசியத்தை கூட்டுகிறது. எளிமையே அழகு என உணர்த்தும் நுால்.
– ஊஞ்சல் பிரபு