படித்த புத்தகங்களிலிருந்து பிடித்த ஆன்மிக கருத்துக்களை தொகுத்து தரும் நுால். அது தொடர்பான சிந்தனைகளும் சேர்த்து தரப்பட்டுள்ளன.
வேத புராணங்கள், இதிகாசங்கள் பற்றிய விளக்கங்கள், திருமாலின் அவதாரங்கள், சிவபெருமானின் முழு முதன்மை போன்ற ஆன்மிகச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. அறிவியல் துறையிலிருப்போர் ஆன்மிகச் செய்திகளை அறிந்து செயல்பட உதவும்.
ஆன்மிகத்துக்கு அறிவியல் விளக்கங்களை அறிந்து கொள்ள வகை செய்கிறது. ஆன்மிக வரலாறு துவங்கி, 21-ம் நுாற்றாண்டில் அருள்பாலிக்கும் மகான்கள் பற்றியும் தகவல்கள் உள்ளன. ஆன்மிகத்தின் மேன்மையை பரப்பும் அற்புத நுால்.
– இளங்கோவன்