நற்செயல்கள் செய்து தர்மத்தின் அடிப்படையில் வாழ வலியுறுத்தும் நுால். நல்வாழ்வுக்கான செய்திகளை பல தலைப்புகளில் எடுத்துரைக்கிறது.
தெய்வ சிந்தனை பயன் இல்லாமல் போகாது; மனதை கட்டுப்படுத்தினால் துன்பம் வராது; தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும்; மற்றவர்களை துன்பத்திற்கு உள்ளாக்காமல் இருக்க வேண்டும் என்பது போன்ற சிந்தனைகளை உள்ளடக்கியது.
நல்ல உள்ளத்தின் பசியை இறைவனே போக்குவான் என நம்பிக்கை தருகிறது. குரு பக்தி, கடவுள் பக்தி, தேசபக்தி பற்றி விழிப்புணர்வு அவசியம் என்கிறது. தர்மம், அகிம்சை, பொறுமை, நேர்மை, கருணை போன்ற குணங்களைப் பின்பற்றி வாழ வலியுறுத்தும் நுால்.
– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்