காஞ்சி மகான் என அறியப்படும் மகா பெரியவாளின் வாழ்க்கை, அற்புதங்கள், போதனைகளை விளக்கும் அரிய நுால். மகா பெரியவாளின் தெய்வீகச் செயல்கள், வழிகாட்டுதல்கள் பற்றிய உண்மை சம்பவங்கள் பகிரப்பட்டுள்ளன.
காஞ்சி மகானிடம் பக்தர்கள் பெற்றுள்ள அனுபவங்கள் பதிவாகியுள்ளன. சாட்சிகளின் வாயிலாக மகா பெரியவாளின் தெய்வீக அருளின் வடிவங்களை வெளிப்படுத்துகிறது.
மகா பெரியவாளின் தனித்துவமான பண்பு, தர்மம், தன்னலமற்ற சேவை, கருணை பற்றி நன்கு விளக்கப்பட்டுள்ளது. மிருகங்களை ரட்சிப்பது, வறுமையில் உள்ளவர்களுக்கு உதவுவது, ஆன்மிக வழிகாட்டுதல் போன்ற நிகழ்வுகள், அவரின் உன்னத வாழ்வை வெளிப்படுத்துகின்றன.
மகா பெரியவாளின் அற்புதங்கள், தெய்வீகச் செயல்களை உணர்த்துவதன் வழியாக வாசகர்களின் ஆன்மிக உணர்வுகளை மேம்படுத்த உதவுகிறது. அதேசமயம் நேர்மை, எளிமை, பகுத்தறிவு, தர்மத்தை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. பக்தர்களின் உண்மையான வாழ்க்கை அனுபவங்கள் அடிப்படையில் உள்ளதால், மகா பெரியவாளின் மகத்துவம் வெளிப்படுகிறது.
இது, தனித்துவம் மிக்க படைப்பாக உள்ளது. குறிப்பாக ஆன்மிகப் பயணம் செய்ய விரும்புவோருக்கு மிகுந்த ஊக்கமும், உற்சாகமும் தரும். ஆன்மிக நம்பிக்கையால் பெற்ற வழிகாட்டுதல், தெய்வீக நிகழ்வுகளை மையமாக கொண்டுள்ளது. வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, மகிழ்ச்சி, அமைதியை ஏற்படுத்தும். தர்மம் நிறைந்த வாழ்வை நோக்கிய பயணத்துக்கு அரிய கையேடாக உள்ளது.
தத்துவங்களை ஆழமான அனுபவங்களுடன் பகிர்ந்து, மகா பெரியவாளின் அருளை புனிதமாகக் கொண்டாடும் முக்கிய ஆவண நுால்.
– இளங்கோவன்