துப்பறியும் கதையில் தனி முத்திரை பதித்த தமிழ்வாணன் எழுதிய மர்ம நாவல்களின் தொகுப்பு நுால்.
பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய இருளில் வந்த இருவர், ஞானக்கிறுக்கு, பெண்கள் தேடிய புதையல், பசுங்கிளியே நம் காதல் பழுக்காதோ ஆகியவை இடம் பெற்று உள்ளன.
ஒவ்வொன்றும் தனித்துவமாக சாதுரியத்துடன் கதையை விவரிக்கின்றன. கதையில் மர்மம் விலகும் போது உண்டாகும் வியப்பும், அதனுள் இருக்கும் சாமர்த்தியமான புத்தி கூர்மையும், அணுகுமுறையும் பிரமிக்கச் செய்கிறது. வாசிப்பின் வேகத்தை அதிகரிக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு இருந்தாலும், இன்றைய சூழலுடன் பொருத்தி வாசிக்கலாம். எழுத்து நடையில் தனித்த சுவாரசியம் தரும் நுால்.
– ஊஞ்சல் பிரபு