மகனிடம் தந்தை கூறுவது போல் அமைந்த நாவல் நுால்.
புகழ் பெற்ற செஸ் சாம்பியன் மனைவி கொலையாகிறாள். வழக்கறிஞர் ரெங்கராசன் அந்த வழக்கை விசாரிக்கிறார்; வாதத்திறமையால், செஸ் சாம்பியனை விடுவிக்கிறார். வீட்டுக் காவலாளிக்கு தண்டனை வாங்கித் தருகிறார். தண்டிக்கப்படும் காவலாளி, மனம் நொந்து தற்கொலை செய்து கொள்கிறான்.
குற்றமற்றவராக கருதப்பட்ட செஸ் சாம்பியன், ஒரு ஆண்டுக்கு பின், வெளிநாடு செல்கிறான். வக்கீலும் அங்கு -செல்கிறார். செஸ் சாம்பியன் தான் கொலையாளி என அங்கிருக்கும் போது தெரியவருகிறது. இதுபோல் மறைந்திருக்கும் ரகசியங்களை மகனிடம் கூறுவது போல் கதை முடிகிறது. விறுவிறுப்பான நாவல் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து