சோலைய சுவாமிகள் வாழ்க்கை வரலாற்று நுால். துாத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் பகுதியில் வாழ்ந்த மகான் அவர். ஜாதி, மத பேதமின்றி மக்களை காத்தவர். இவரது வாழ்க்கை வரலாறு மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. புலவர் புராணம் என்ற நுாலில் சோலைய சுவாமிகள் வரலாறு தனித்து விளக்கப்பட்டுள்ளது. அது, அவதாரமே புண்ணிய வடிவமானது என்கிறது.
புகழ் பெற்ற சச்சிதானந்த மாலை நுாலில் சோலைய சுவாமிகள் இறைவனின் தன்மைகளை விளக்கிக் கூறியுள்ளார். இறைவனை போற்றுவதால் அடையும் நன்மைகளையும் விவரிக்கிறார். மூன்றாம் பகுதியாக விளங்கும் சோலைய சுவாமிகள் தோத்திரத்தில், அற்புதங்கள், அருள் பணிகள் விளக்கப்பட்டுள்ளன. மகானின் வாழ்க்கையை அறிய உதவும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்