சாதாரண குடும்ப பெண்ணின் வாழ்க்கையை மையமாக உடைய விறுவிறுப்பான நாவல்.
போராட்டம் மிக்க தாயுடன் வசிக்கிறாள் கதையின் நாயகி. தந்தை பிரிந்ததால் குடும்பம் வேதனையில் தவிக்கிறது. இந்த சூழ்நிலையில், அந்த பெண் வாழ்வில் குறுக்கிடுகிறான் ஒரு இளைஞன். பண்புடன் பழகி தக்க உதவிகளை செய்கிறான். அவன் மீது பெண்ணுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.
பிரிந்து சென்ற தந்தையை தேடி கண்டுபிடிப்பதில் அந்த பெண்ணுக்கு உதவுகிறான் மற்றொரு இளைஞன். சேர்ந்தே தேடும்போது நிறைய மர்ம முடிச்சுகளை எதிர்கொண்டு கதை நகர்கிறது. அவற்றை அவிழ்க்க நடக்கும் முயற்சியை மிக இயல்பாக சொல்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் திருப்பங்களுடன் நகர்கிறது. சுவாரசியம் குன்றாது எளிய நடையில் அமைந்த நாவல்.
– ராம்