சமூக மாற்றத்திற்கான செயல் முறைகளை விவரிக்கும் குறுநாவல் நுால்.
காலங்காலமாக காட்டி வரும் அதிகார திமிரை அடக்கி, ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி கண்ட இளைஞர்களின் செயல்பாடு தான் கதையின் அடிநாதம். ஜாதி பெயரால் கட்சிகள், சங்கங்கள் பெருகி மக்களை கூறுபோடும் கொடுமையை உணர்ச்சி பொங்க குறிப்பிடுகிறது.
உழைக்கும் மக்களை முன்னேற விடாமல் அடக்கி, பரம்பரைத் தொழிலைப் பார்க்கச் சொன்ன வர்க்கம் ஒரு புறம்; அதை எதிர்த்து குரல் எழுப்பி, அழிக்கத் துடிக்கும் இளைஞர்கள் மற்றொரு புறம். இதில் நடக்கும் போராட்ட வெற்றியை பறைசாற்றி எழுச்சியூட்டுகிறது. ஆர்வத்தை துாண்டும் வகையிலான நாவல் நுால்.
– ஊஞ்சல் பிரபு