சிந்தையை கவரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
ஒவ்வொன்றும் வேறு வேறு கோணங்களில், மனிதர்களின் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை சித்திரமாக வரைந்து காட்டப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கதைகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளவை. எல்லாவற்றிலும் மனம் சிலாகிக்கும் சம்பவங்கள் பதிந்து கிடக்கின்றன.
வீழ்வது சகஜம்; விழுந்த பின் எழுவதும் வீரம்தான். வீழ்ந்து விடுவோமோ என பயந்து கிடப்பது கோழைத்தனம் என விவரிக்கிறது. சமுதாயம் எப்படி இருக்கிறது என காட்டும் ‘பயிற்சிப் பட்டறை’ கதையும், சித்தியின் பிம்பத்தை புதுவிதமாக காட்டும் ‘சிற்றன்னை’ கதையும் கவனத்தை ஈர்க்கின்றன. உயிரோட்டமான எழுத்து நடையில் தேர்ந்த வாசிப்புக்கு உகந்த நுால்.
– ஊஞ்சல் பிரபு