திருப்புகழ் பற்றி முழுமையான செய்திகளை முருகனடியார் அறிந்து பயன் பெறும் வகையில் தொகுத்து தரும் நுால். இதுவரை யாரும் மேற்கொள்ளாத பெரும்பணியை வெற்றிகரமாக செய்துள்ளது.
திருப்புகழ் சொற்பொருளாய்வு, சந்தம். அருணகிரிநாத முனீந்திரர் வரலாறு, அவரது திருவருள் அனுபவங்கள், திருப்புகழ் பெருமை திருப்புகழ்ப் பதிப்புகள், திருப்புகழைப் போற்றிப் புகழ்ந்த அருளாளர்கள் பற்றிய விபரம் உள்ளது.
திருப்புகழ்ப் பிரசாரம், அன்றாட வாழ்வில் திருப்புகழ் போன்ற தலைப்புகளில் சிந்தித்து, செய்திகளை திரட்டி முறைப்படுத்தி தந்துள்ளது. திருப்புகழ் ஞானம், ஆய்வியல் கண்ணோட்டத்தை காட்டும் நுால்.
– டாக்டர் ம.ராமகிருஷ்ணன்