இந்திய வரலாற்றை சுருக்கமாக உரைக்கும் நுால். பண்டைய நாகரிகங்களில் துவங்கி, உலகின் முக்கிய சக்திகளில் ஒன்றாக எழுந்துள்ளது வரையிலான செய்திகளை எடுத்துரைக்கிறது.
இந்தியாவில் வாழ்ந்த மனிதர்கள், ஹரப்பா நாகரிகம், வட பகுதியில் ஆட்சி செய்த பேரரசர்கள், தெற்கு பகுதியில் கோலோச்சிய அரசுகள், மொகலாயர், ஆங்கிலேயர் வருகை ஆட்சி, சுயாட்சிக்கான போராட்டங்கள், அதிகார மாற்றங்கள், சுதந்திர இந்தியாவின் பயணம் என விளக்கமாகச் சொல்கிறது.
இந்தியாவில் அரசுகள் உருவாக்கம், பக்தி இயக்கத்தில் தமிழகம் தந்த கொடைகள் குறித்த விபரங்களையும் பதிவு செய்துள்ளது. இந்தியா என்ற தொன்மையான நாகரிக பெரும் நிலப்பரப்பை புரிந்து கொள்ள உதவும் நுால்.
– மலர்