திருநெல்வேலி பகுதியில் நுாறாண்டு களுக்கு முன் வாழ்ந்த நடுத்தரக் குடும்பங்களை மையப்படுத்திய நாவல் நுால். கதைக்களம் காட்சி போல் துலக்கமாக அமைந்திருக்கிறது.
முற்போக்கு சிந்தனை உடைய கதாபாத்திரம் நாவலை நகர்த்துகிறது. பாரம்பரியமாக பழமையில் ஊறியோர், காலத்திற்கேற்ப மாற்றங்களை நோக்கிச் சிந்திக்கும் கதாபாத்திரங்களுடன் நேர்த்தியாகப் பின்னி உருவாக்கப்பட்டுள்ளது.
சமூகநீதிக் கருத்தோட்டத்தை முன்வைக்கும் உரையாடல் வலு சேர்க்கிறது. காந்திஜியின் மனிதநேயக் கருத்துகளை காட்சிகளுக்கு ஊடே பிணைத்து விடுதலைக்கு பாடுபட்டோரை போற்றுகிறது.
நடுத்தரக் குடும்ப உறவுமுறைகள், ஏமாற்றங்கள், தடுமாற்றங்கள், சமரசங்கள், போலி கவுரவம் பேணும் முறையை இயல்பாக காட்சிப்படுத்தும் நாவல்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு