வரலாற்றை அறிவியல் ரீதியாக அணுகும் வழிமுறையை சிறுவர், சிறுமியருக்கு கற்பிக்கும் கதை நுால். பழங்காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக உள்ளது.
ஓய்வு பெற்ற பெண் விஞ்ஞானி கதையில் மைய கதாபாத்திரம். அவர் வழியாக சிறுவர், சிறுமியருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. கால இயந்திரத்தில் சென்று தமிழர் வரலாற்று சிறப்புகளை அறிவதாக அமைக்கப்பட்டுள்ளது.
கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் படங்கள் காட்சிமயமாக அமைந்து சுவாரசியம் ஊட்டுகின்றன. அறிவியல், வரலாற்று உண்மைகளை கதை வடிவில் புகட்டும் நுால்.
– ஒளி