சிவன் மீது பக்தி கொண்ட 63 நாயன்மார்களை பற்றிய சுருக்கமான நுால்.
பொய்யே கூறாத திருநீலகண்ட நாயனாரை, சிவன் ஆட்கொண்ட செய்தி கவனிக்க வைக்கிறது. மன்னரான மெய்ப்பொருள் நாயனார், சிவனடியாராக வந்த எதிரி கத்தியால் குத்தினாலும், பத்திரமாக நாட்டின் எல்லையில் விட்டு வர உத்தரவிட்டு பக்தியை வெளிப்படுத்திய வரலாறு உள்ளது.
கடலில் பிடிக்கும் மீனில் ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் அதிபத்த நாயனாருக்கு, பின்னாளில் ஒரே ஒரு மீன் கிடைக்கிறது. அதையும் இறைவனுக்கு படைக்க, குடும்பம் வறுமையில் வாடுகிறது. ஜொலிக்கும் சிறப்பு மீன் ஒருநாள் கிடைக்க, அதையும் படைத்து பக்தியைக் காட்டுவது போன்ற சுவாரசியமான சம்பவங்களை உடைய நுால்.
– முகில்குமரன்