அறச் சிந்தனைகளை சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
தலைப்பாக உள்ள ‘தாலியும் தலைவரும்’ என்ற கதையில் குறுக்குவழியை கடைப்பிடிப்பதில் வித்தியாச சிந்தனையாக மலர்ந்துள்ளது. மக்களைத் துாண்டி அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் பற்றி அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டியதை, ‘கானல் நீர்’ கதை சொல்கிறது.
அரசியல்வாதிகள் திருந்தும் வழிமுறைகளை, ‘செயல்வீரர்கள்’ கதை பேசுகிறது. பெண் வீறுகொண்டால் என்ன நடக்கும் என்பதை காட்டுகிறது ‘நிலாவும் சூரியனும்’ கதை. பெண்கள் அவசியம் படிக்க வேண்டியது. இந்த தொகுப்பில் சில விரும்பி படிக்க வைக்கின்றன; சில திரும்பிப் படிக்க வைக்கின்றன. அதில் ஒன்று ‘சரணாகதி’ கதை. வீட்டு நுாலகத்துக்கு வேண்டிய தொகுப்பு நுால்.
– சீத்தலைச் சாத்தன்