சைவ சித்தாந்த உண்மைகளை விளக்கும் நுால்.
சைவ சமயம், சித்தாந்த தத்துவம், சாத்திரங்கள், தோத்திரங்கள் பற்றி தெளிவுபடுத்துகிறது. பதி, பசு, பாசத்துக்கு விளக்கம் தருகிறது. அறிவுப்பூர்வமாக, ‘உயிரை இறைவன் படைக்கவில்லை; உடம்பைத் தந்து அதை தோன்றச் செய்துள்ளான்’ என தெளிவுபடுத்துகிறது.
இறை, உயிர், ஆணவம், கன்மம், மாயை, வீடுபேறை வினா – விடையாக எளிமையாக தருகிறது. சிவம் என்ற சொல் மங்கலம், நன்மை என்ற பொருளை குறிப்பதாக கூறுகிறது. அது உயிரினங்களின் காவலன் என எடுத்துரைக்கிறது. சைவ சித்தாந்த களஞ்சிய நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்