மும்பையில் சாலையோர வியாபாரிவாழ்வை காட்டும் சமூக நாவல். விளிம்பு நிலை மக்களுக்கு, நடைபாதை எப்படி எல்லாம் உதவுகிறது என விவரிக்கிறது.
மகன் ஆங்கிலத்தில் புலமை மிக்கவனாக வேண்டும் என ஆசைப்படுகிறார் தந்தை. அதை நிறைவேற்ற முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி மும்பை செல்லும் இளைஞனை சுற்றி பின்னப்பட்டுள்ளது.
நடைபாதையில் வசிக்கும் மனிதர்களுடன் அனுபவத்தில், சூட்சுமங்களை புரிந்து பயணிக்கிறான். அது வாழ்வை எப்படி நகர்த்துகிறது என்பதை இயல்பு மாறாமல் சித்தரிக்கிறது. மும்பை ஏழை மக்களின் வாழ்வை ஆழ்ந்து நோக்கி தரிசிக்க வைக்கிறது. நடைபாதையில் வசிக்கும் மக்கள் வாழ்க்கை போக்கை, அலங்காரம் இன்றி சித்தரிக்கும் நாவல்.
– ஊஞ்சல் பிரபு