அத்தை மகளை திருமணம் செய்யும் கனவுடன், மலேஷியா சென்று உணவு விடுதியில் பணி புரிந்த இளைஞரை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல் நுால். முக்கிய கதாபாத்திரத்தின் கனவு நிறைவேறியதா என்பது சார்ந்து மிக சுவாரசியமாக நகர்கிறது. காதல், எதிர்பார்ப்பு, பெண் சுதந்திரம் குறித்து பேசுகிறது.
மலேஷியாவும், இந்தியாவும் கதை களமாக இருப்பதால், இரு நாட்டு அரசியலையும் பேசுகிறது. வேலைக்காக மலேஷியா சென்று பல தலைமுறைகளாக வாழும் தமிழர் பிரச்னையை கூறுகிறது.
நம்பிக்கை சார்ந்த விஷயங்களை, மலேஷியாவிலும் மக்கள் தொடர்வதை விவரிக்கிறது. புதிதாக மலேஷிய ெசல்வோர் அங்கு மொழியை புரிந்து கொள்ளும் வழிமுறையை கற்பிக்கிறது. தமிழர் இடம்பெயர்வு வாழ்வை கூறும் நுால்.
– டி.எஸ்.ராயன்