ஏழ்மை நிறைந்த வாழ்க்கையை மையமாக வைத்து படைக்கப்பட்டு உள்ள நாவல் நுால். பள்ளியில் சேர்ந்ததில் இருந்து, வெளியேறியது வரையிலான வறுமை பாதிப்புகள் எழுதப்பட்டுள்ளன.
உடைந்த சிலேட்டில் ‘ஆனா ஆவன்னா’ எழுதிய பின், புது சிலேட்டு வாங்கிய குஷி பளிச்சிட நிகழ்வுகளை விவரிக்கிறது. திருடக்கூடாது, வஞ்சனை செய்யக்கூடாது, புகழ் போதைக்கு அடிமையாகக் கூடாது என பாட்டி கதையாக சொல்லிக் கொடுத்தவை நெஞ்சை கவ்வுகிறது.
நான்கு மாடுகள், சிங்கம், நரி கதை, ஒற்றுமையின் உயர்வை சொல்கிறது. விடுகதைகள் தந்து உரிய விடை சொல்லப்பட்டுள்ளது. அமாவாசையில் யாரும் நெசவு செய்வதில்லை என்ற பாரம்பரிய பழக்கத்தை பகிர்கிறது. அந்தக் கால திருப்பூர் நகரைக் கண்ட உணர்வை தரும் நுால்.
– சீத்தலைச்சாத்தன்