திருப்புகழ் பாடல்களுக்கு தெளிவுரை தரும் நுால். எளிமையான விளக்கம், பாடற்பொருளை சரியாக உணர்த்திஇருக்கும் திறம் போற்றக்கூடியதாக உள்ளது. முந்துதமிழ் மாலை எனத் துவங்கும் திருச்செந்துார் பற்றிய செய்யுளுக்கு, தெளிவுரை புலமைக்குச்சான்றாக உள்ளது. முருகனை பாடும் ‘அருமா மதனை...’ எனத் துவங்கும் பாடல், அருணகிரியின் தன்னுணர்ச்சியைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
அடுத்து, ‘தமர குரங்களும்...’ எனத் துவங்கும் பாடலும் வாழ்வில் நிகழும் மரணத்தைத் தவிர்க்கச் சொல்லும் கருத்தும், முருகன் செய்த அற்புதச் செயல்களையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது. முருக அன்பர்களுக்கு பயன்படும் விதத்திலும், பாராயணம் செய்ய ஏற்ற வகையிலும் அமைந்திருக்கும் அற்புத பக்தி நுால்.
– ராம.குருநாதன்