மகா கணபதி ஹோமம் உட்பட 33 வகை ஹோமங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ள நுால்.
ஹோம குண்டத்தின் அமைப்பு, ஆறு வகை வடிவங்கள், அர்ப்பணிக்கும் பொருட்கள், சமித்து வகை ஹோம குச்சிகள், தானிய வகைகள், பட்சணங்கள், அன்ன வகைகள், திரவியங்கள், பொடி வகை, கிழங்கு வகை, வேர் வகை, பட்டை வகை, இலை வகை, மலர் வகை, காய் வகை, பழ வகை, மது வர்க்கம், உலோக வகை, மருந்து வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
தெய்வ வழிபாட்டுக்கு பொருத்தமான நாள், நேரம், நிவேதனங்கள், மூல மந்திரங்கள், பலன்கள் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளன. ஹோமங்களை முறைப்படி செய்து இறைவன் பரிபூரண அருளை பெற வழிகாட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்