பட்டினத்தார் அடிச்சுவட்டில் ஒவ்வொரு இடமாகச் சென்று கண்டும், கேட்டறிந்தும் நுட்பமான தகவல்களை தந்துள்ள நுால். நான்கு பட்டினத்தார்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது. எந்தெந்த காலத்தில் வாழ்ந்தனர் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
திருஒற்றியூரில் இறைவனிடம் ஒன்றியது பற்றிய தகவல்கள் உள்ளன. செல்வத்திற்கு அதிபதியான குபேரனே, ஈசன் திருவருள்படி, மண்ணுலகம் வந்ததாக கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்ததால் பட்டினத்தார் என பெயர் பெற்றதாக கூறுகிறது.
அவரது திருநட்சத்திரம், அவதாரச் சிறப்புகள் பாங்குற சொல்லப்பட்டுள்ளன. சித்தராக வெளிப்படுத்தியது நிகழ்வுகளாக பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன. பக்தி, இலக்கிய வேட்கை கொண்டோருக்கு உகந்த நுால்.
– டாக்டர் கார்முகிலோன்