நல்ல சிந்தனைகள் உடைய சிறுகதைகளை உள்ளடக்கிய நுால். வறுமையில் வாடும் சிறுவன், தனக்கு கிடைத்த இரவல் வாழ்க்கையை விரும்பி ஏற்பது இளம் தலைமுறையின் தெளிவைக் காட்டுகிறது. கணவரை இழந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய இளைஞனுக்கு விதித்த நிபந்தனை, பெண்ணின் மனத் தெளிவை படம் பிடிக்கிறது.
-மின்னஞ்சல் பற்றிய சிறுகதை ரசிக்கும்படியாக கூறப்பட்டுள்ளது. தள்ளுவண்டியில் உணவுக்கடை நடத்துபவருக்கு கிடைத்த பண உதவி, கைமாறு கருதாத பணி, நல்லதையே விதைக்கும் என்பதற்கு சான்றாக உள்ளது. படிக்க வேண்டிய சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– முகில்குமரன்