ராமனின் இளமைப் பருவத்தைப் பற்றிய ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலம், அரசியல் படலங்களுக்கு வார்ப்புரை நுால். கம்பன் கவித்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
கோசல நாட்டில் சரயு நதியில் வெள்ளம் பெருக்கெடுத்த போது பார்க்க எவ்வாறு இருந்தது என்பதை கவித்துவத்துடன் குறிப்பிட்டுள்ளது. பொருட்களை அடித்துச் சென்ற வெள்ளம், வணிகர் கூட்டம், வானவில் பற்றி மிக நுட்பமாக நோக்கி கூறப்பட்டுள்ளது.
உழவர் ஓசை, சங்கு ஓசை, எருதுகள் மோதிப் பாயும் ஓசை, நீரில் எருமைகள் பாயும் காட்சிகள் குறித்து சுவாரசியமாக விவரிக்கப்பட்டு உள்ளது. கம்பராமாயண பாடல்களுக்கு விரிவான விளக்கம் தரும் அற்புத நுால்.
– முகில்குமரன்