காதல், நம்பிக்கை, ஆன்மிகத்தின் ஆழம் என்ற உணர்ச்சிகளை கூறும் நாவல் நுால்.
அழகான காதல் கதை இது. சீரடி சாய்பாபாவின் பக்தையான கதாநாயகி ஷாலினி அன்பை வெளிப்படுத்தும் விதம் அருமையாக உள்ளது. கதாநாயகன் கார்த்திக்கின் நற்குணம், துாய உள்ளம் பாராட்டும் விதத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
டெலிபோன் பேச்சால் கவர்ந்தவனை விரும்புவதும் அது நிறைவேற, சாய்பாபா அருளை பெற்று மகிழும் இடம் தெய்வீக சக்தியை உணர வைக்கிறது.
நாவல் கதாபாத்திரங்கள் மனதில் உள்மோதல்களுடன் போராடி, பக்தியின் வாயிலாக ஆறுதல் தேடுவதாக அமைந்துள்ளது.
ஆன்மிகத்தின் சாரத்தையும், மனித உணர்வுகளையும் இணைத்து வெளிப்படுத்தும் நாவல் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து