அன்றாட வாழ்வில் பலவகை மனிதர்களை சந்திக்கும் அனுபவத்தை தரும் நுால்.
அலுவலக வளாகங்களில், அக்கம் பக்கத்து வீடுகளில், குடும்ப உறவினர்களில், நண்பர்களில் என்று பல்வேறு வண்ணங்களை உடையோரை இந்த புத்தகத்தில் சந்திக்க முடிகிறது. இவர்களை கூர்ந்து கவனித்தால், நிச்சயமாக ஏதோ ஒரு வித்தியாசமான குணாதிசயம் இருப்பதை காண முடியும். அது வியப்பு ஏற்படுத்தி பேசுபொருளாக வைக்கும்.
அது போன்றோர் குணாதிசயங்களை படம் பிடித்துக்காட்டுகிறது. அன்றாடம் அண்மையில் வருவோரை கூர்ந்து அவதானிக்க வைக்கும், பாடங்களை கற்று தரும். புத்தகத்தை படிக்கும்போது, இத்தகைய குணாதிசயங்கள் உடையோரை சந்தித்த நினைவுகள் பீறிட்டு எழும்.
– ராம்