இளமை காதல் போல முதுமை காதலை புதுமையுடன் சொல்லியுள்ள நுால். படங்களும் புரட்டிப் பார்க்க வைக்கின்றன. எல்லாவற்றையும் மிஞ்சிய பேராசை, பேரக்குழந்தைகளை பார்க்க விரும்புவது தான் என்பதை முன் வைக்கிறது. பணம் அனுப்பும் பிள்ளையை விட, பாசம் காட்டுபவரை தான் பெற்ற மனம் தேடும் என்ற உண்மையைக் காட்டுகிறது.
வெளிநாடு போன மகன் சரியான நேரத்தில் உண்ணுகிறானா என்று, தாய் மனம் எண்ணி ஏங்குவதை படம் பிடிக்கிறது. சிறிய வயதில் கிடைத்த தோழிக்கு, முதியவள் எழுதும் கடிதம் ரசிக்கும்படி உள்ளது. பாவாடை, தாவணி கட்டி பல்லாங்குழி ஆடிய அனுபவத்துடன், பல் விழுந்த குழியோடு எண்ணுவது ரசிக்க வைக்கிறது. சுவாரசியம் மிக்க நுால்.
– சீத்தலைச் சாத்தன்