தங்கம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களின் திரட்டாக மலர்ந்துள்ள நுால். ஒரு உலோகம் தனிமதிப்புடன் விளங்கும் பின்னணியை எடுத்துரைக்கிறது.
மஞ்சள் உலோக மகிமையை தங்கம் என்ற பெயர் தோன்றிய வரலாற்று தகவல்களுடன் துவங்குகிறது. தங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்களை தொகுத்து தருகிறது. இந்த உலோகத்தின் தனித்தன்மை, வேதியியல் பண்புகள், மதிப்பு, நச்சுத்தன்மை பற்றிய விளக்கம் உள்ளது.
தங்க சுரங்கம், சுத்திகரிப்பு நடைமுறை, ஆபரணங்கள் செய்வது, துய்மை அளவு பற்றி சுருக்கமாக தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் உச்சப்பட்ச விலை பட்டியலும் உள்ளது. தங்க உலோக தர நிர்ணயம் உட்பட செய்திகளை சுருக்கமாக தரும் நுால்.
– மதி