இலக்கியம் பற்றிய கேள்விகளுக்கு விடை தேடும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். நவீன தத்துவங்களான இருத்தலியம், சர்ரியலிசம், காலனியம், பின்காலனியம், அமைப்பியல், பின் அமைப்பியல் நோக்கில் அணுகப்பட்டுள்ளது.
சாகித்திய அகாதெமி அமைப்பு நடத்திய கருத்தரங்கங்களில் வாசித்த கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. தமிழ் இலக்கிய உலகத்தின் புதிய அணுகுமுறையையும், பாய்ந்துள்ள வெளிச்சத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
இலக்கியம் பயன் தரும் தன்மைக்கு அப்பாற்பட்டு அமைந்துள்ளதாக குறிப்பிடுகிறது. தத்துவ பார்வையை இலக்கியத்தில் பொருத்தும் வகையில் அமைந்துள்ளது.
இலக்கியத்தில் புதிய முயற்சிகளை தேடுவோருக்கு இந்தப் புத்தகம் திறவுகோலாக அமைந்து உதவும்.
– முகிலை ராசபாண்டியன்