திருக்கயிலை யாத்திரைக்கு விரும்பிய போதெல்லாம் செல்ல முடியாது. கயிலையும், மானசரோவரும் இந்தியாவில் இல்லை. இரண்டுமே இமயமலையின் மேற்கு பகுதியில் இருக்கின்றன.
புனித தலங்களை தரிசித்த அனுபவங்களை எளிய நடையில் அனைவரும் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்த நாவல். நேரில் சென்று தரிசித்த அனுபவத்தை இதை படிப்பதால் பெற முடியும். புனித தலங்கள் செல்லும் வழியில் கண்ட காட்சிகளை விவரித்துள்ள விதம், மனக்கண் முன் வீடியோ ஓடுவது போன்ற அனுபவத்தை அளிக்கிறது.
திருக்கயிலாயத்தைத் தரிசிக்க விரும்புவோருக்கும், நேரில் செல்ல இயலாதோருக்கும் இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.
– இளங்கோவன்