தயானந்த சரஸ்வதி சுவாமிகள் வழங்கிய சாதன பஞ்சக உரையின் தமிழாக்க நுால். வேதாந்த உட்பொருளை குரு விளக்க, ஐயமற்ற அறிவைப் பெறுவது ஸ்ரவணம் எனப்படும். மனதில் எழும் மாற்று விளக்கங்கள், பிற சமயத்தவரிடம் வெளிப்படும் வேற்று விளக்கங்களை குரு உதவியுடன் வெல்வது மனனம்.
ஸ்ரவணத்தை, ஐயம் அகற்றுதல் எனவும், மனனத்தை திரிபு அகற்றுதல் எனவும் கொள்ளலாம். ஐயம் திரிபு அற அறிந்த காலை, ஞானத்தை உள்ளத்தில் கலக்க அப்பியாசம் தேவை. இது நிதித்யாசனம் எனப்படும். ஞான வேட்கை உடையோருக்கு நிதித்யாசனம் வழங்கும் நுால்.
– பானுமதி