அலைபேசியின் நன்மை, தீமைகளை அலசும் நுால். அடிமையாகி வாழ்வை தொலைப்பது பற்றிய கருத்தை உடைய சிறுகதைகள் நெஞ்சில் பதிகின்றன.
ஓவியத்தில் பரிசு பெறுகிறான் சிறுவன். அவன் வரைந்து பரிசுக்குரியதாக தேர்வு பெற்ற ஓவியம், கணவனும் மனைவியும் அலைபேசியை நோண்டிக் கொண்டிருப்பதை சித்தரிக்கிறது. மகன் வீட்டுப்பாடம் செய்கிறான். பெற்றோருக்கு படிப்பினை ஊட்டுவதாக அமைந்துள்ள கதை இது.
துரித உணவு வகையான நுாடுல்ஸ் போன்றவற்றுக்கு நாக்கு அடிமை ஆகிவிட்டால், அது உயிர் கொல்லியாக மாறும் என மற்றொரு கதை பாடம் புகட்டுகிறது. மதுவைப்போல உணவுகளும் மயக்கும் சக்தி உள்ளதாக குறிப்பிடுகிறது. புதிய முத்திரை பதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– சீத்தலைச் சாத்தன்