அனாவசிய வார்த்தைப் பிரயோகங்கள் இன்றி, உள்ளத்து உணர்ச்சிகளை வாசிப்போர் மனதில் தங்குமாறு அமைத்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
தோட்ட வேலை செய்யும் குடும்பம் எத்தகைய துன்பங்களுக்கு ஆளாகியுள்ளது என்பதை விவரிக்கிறது. பரம்பரையாக தொழில் செய்த தமிழர்கள், மலேஷிய சுதந்திரத்திற்குப் பின், சொத்துக்களை வந்த விலைக்கு விற்றதை விவரிக்கிறது, ‘நடுத்தெருவில் ஒரு குடும்பம்’ என்ற சிறுகதை.
பர்மாவில் தமிழர் பாதிக்கப்பட்டதை தெளிவாக பதிவிட்டுள்ளது. பணத்தாசை தோன்றிவிட்டால் தடுமாற்றம் ஏற்படுவது இயற்கை தான் என்கிறது, ‘மன மாற்றம்’ சிறுகதை. வெளிநாட்டில் தமிழர் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை பதிவு செய்கிறது. அயலகத் தமிழர் வாழ்வை விவரிக்கும் படைப்பு நுால்.
– டாக்டர் கார்முகிலோன்