பல்சுவையுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதை தலைப்பிலும் நா.பார்த்தசாரதியின் எழுத்துகளில் மிளிரும், ‘பஞ்ச்’ வசனங்கள் தெறிக்கின்றன.
சேமிப்பின் அருமை, ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அதிகம் என்பதை, ‘அனுபவம் பெரிதே’ என்ற கதை எடுத்துச் சொல்கிறது. பெண் பாத்திரப் படைப்பு அருமை. கடின உழைப்பாளியை காட்டிலும் ஸ்மார்ட் பணியாளர் தான் ஜெயிக்க முடியும் என்ற அனுபவத்தை விவரிக்கிறது, ‘புத்திசாலி’ என்ற கதை.
ஆசிரியர் – மாணவர் உறவை வெளிப்படுத்துகிறது, ‘வீரியம்’ கதை. பாத்திரப் படைப்புகள் அருமை. கருணையால் அன்பு மலரலாம்; ஆனால், கருணையும் அன்பும் சங்கமமாகும் இடத்தில் தான் காதல் பிறக்கும் என்பது நல்ல கருத்து பிரவாகம். அறிவுக்கு விருந்தளிக்கும் நுால்.
– சீத்தலைச்சாத்தன்