திருமாலின் பெருமைகளை கூறும் பெரியாழ்வார் திருமொழியில், முதல் திருமொழிக்கு வார்ப்புரை அளித்துள்ள நுால்.
பெரியாழ்வார் திருமொழியில் 43 பதிகங்கள் உள்ளன. கண்ணபிரானின் வளர்ப்புத்தாய் யசோதையாகவே பெரியாழ்வார் பாவித்துக் கொள்கிறார். அதன்படி, முதல் பத்தில் மூலப் பாடல்களுக்கு தெளிவான வார்ப்புரை அளிக்கப்பட்டு உள்ளது. முதல் திருமொழி திருப்பல்லாண்டில் திருமால் பெருமைகளை கூறும் பாடல்களுக்கான வார்ப்புரை கவனிக்க வைக்கிறது.
திருமாலின் தோற்றம், ஆயுதங்கள், கருடனை கொடியில் கொண்டிருப்பது, பாம்பின் மீது பள்ளிகொண்டிருப்பதற்கான தெளிவுகள் கூறப்பட்டு உள்ளன. மூலப்பாடல்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கும் நுால்.
– முகில் குமரன்