உலகத்தரம் வாய்ந்த ரஷ்ய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நுால். பிரபுத்துவக் குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
இயல்பான கதாபாத்திரங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. காட்சியமைப்பு, 19ம் நுாற்றாண்டுக்கு இட்டுச் செல்கிறது. பெரும்பாலான உரையாடல்கள் ஆணாதிக்க நோக்கில் பெண்களைச் சுற்றி அமைந்துள்ளன. ஒவ்வொரு கதை மாந்தர் வழியாகவும் விவாதம் எழுப்பி சிந்திக்க வைக்கிறது.
ரஷ்ய மேட்டுக்குடி மக்களின் உல்லாச வாழ்க்கை, நடனம், இசை நிகழ்ச்சிகள், விருந்து, கேளிக்கை என அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது.
தீய நடத்தையால் குடும்பத்தில் குழப்பம் தான் ஏற்படும் என்பதை படிப்பினையாக சுட்டிக்காட்டி அறிவூட்டும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு