சாதாரண மனிதர் வாழ்க்கை அனுபவங்களை கதைகளாக விவரிக்கும் நுால்.
வாழ்க்கையில் உயர நல்ல எண்ணங்களும், நற்சிந்தனைகளும் அவசியம் என்கிறது. பூலோகத்தில் அனைவரும் ஒரே அளவு திறமை உடையோராக இல்லை. அது மாறுபடுகிறது. ஆனால், திறனை வளர்த்துக் கொள்ள சம வாய்ப்பு பெற்றிருக்கும் சூழலை எடுத்துக் கூறுகிறது.
உடலுக்கு மட்டும்தான் அழிவு, ஆன்மாவுக்கு இல்லை என விளக்குகிறது. ஒருவருக்கு கிடைக்க வேண்டியதை எவராலும் தடுக்க முடியாது; கிடைக்க முடியாததை எவராலும் பெற்றுத் தர முடியாது என எடுத்துரைக்கிறது. அனுபவங்களின் வழி உணர்ந்ததை கூறும் கதை நுால்!
– இளங்கோவன்