நல்லொழுக்கம், உயர்ந்த நீதியை சிறுவர் மனதில் பதிய வைக்க, புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதை முடிவிலும் உரிய நீதி பதிவிடப்பட்டுள்ளது.
பொய் கூறியதால் பிரம்மனுக்கும், தாழம்பூக்கும் கிடைத்த தண்டனை, தந்தை சொல் தட்டாத ராமர், கடவுளை காட்டக் கேட்ட இளைஞருக்கு, பாலைக் காட்டி விளக்கமளித்த முனிவர் என, சுவாரசியம் ஊட்டுகிறது.
இறந்த மகனை உயிர்ப்பிக்க வேண்டிய தாய்க்கு, புத்தர் கூறிய அறிவுரை தனித்துவம் மிக்கது. எந்தவொரு நேர்மையான செயல்பாட்டுக்கும் இறைவன் அருள் புரிவார் என்பது போன்ற நன்னெறி புகட்டும் கதைகளின் தொகுப்பு நுால்.
– புலவர் சு.மதியழகன்