இதழ்களில் வெளியான, 39 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெரும்பாலான கதைகள், ஒரு நீதியை உள்ளடக்கியுள்ளன.
கூட்டுக் குடும்பமாக இருந்தால், இளசுகளுக்கு சந்தோஷம் கெடும் என, மாமியார் நடத்தும் நாடகம் ஒரு வித்தியாசமான கதை. தான் பட்ட துயரம் மருமகள் படக்கூடாது என எண்ணும் பெண்ணைப் பற்றியது. பணக்கார பெண் அணியும் கவரிங் நகை, தங்கமாக தெரிவதை சுட்டிக்காட்டுகிறது ஒரு கதை.
வீடு என்பது ஜனநாயக நடைமுறையுள்ளது. அங்கு கணவன் – மனைவியை எதிர்க்கட்சிகளாக விவரிக்கிறது. உறவுகளை மட்டமாக எடை போடக்கூடாது என, ‘மீன் குழம்பு சோறு’ கதை அறிவுரைக்கிறது. எதிர்பாராத திருப்பங்களுடன் முடிகின்றன கதைகள். நடை அழகுடன் உள்ள நுால்.
– சீத்தலைச்சாத்தன்