எண்ணங்களே மனித வாழ்வை உயர்த்தும் என்ற கருத்தை முன் வைக்கும் நுால்.
பூமி பற்றிய கேள்வியுடன் துவங்குகிறது. நீரிலும், நிலத்திலும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை சின்ன கட்டுரைகளின் வழியாக மனதில் பதிக்கிறது. மனிதனை உயர்வு, தாழ்வுடன் படைக்கவில்லை இறைவன்; ஆண் – பெண் பிரிவுகளை இனப்பெருக்கத்திற்காக படைத்தான் என்பதை தெளிவாக்குகிறது.
மனிதன் பணம் சேர்க்க அரசியல் துணை நிற்கிறது; ஏழை – பணக்காரன் என்ற பிளவு நடைமுறைகளை சுட்டிக் கட்டி மாற்றும் வழிமுறைகளை சொல்கிறது. கர்வம் என்ற ஆபத்தான உணர்வுக்கு அடிமையாவதை தோலுரிக்கிறது. மனிதர் தவிர, எந்த ஜீவராசிக்கும் நேரத்தின் அருமை தெரிவதற்கு வாய்ப்பில்லை போன்ற கருத்துகள் நிறைந்துள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்