பகவத்கீதையின் சாரத்தை சுலோகங்களுடன் தெள்ளத் தெளிவாக்கும் நுால்.
பகவத் கீதை 700 சுலோகங்கள், 18 அத்தியாயங்களுடன் உள்ளது. அதில் சில பகுதிகளை எடுத்து தெளிவாக விளக்குகிறது. ஆன்மா அழிவற்றது; உடல் அழியும் இயல்பு கொண்டது என்பதை அழுத்தமாக சொல்கிறது. அர்ச்சனை, யாத்திரை, தவம், புலனடக்கம் இவை தான் கர்மயோகம் என ஆன்மிக கருத்துக்களை விளக்கமாக எடுத்துரைக்கிறது.
ராகவ யாதவீயம் என்ற புத்தகம் பற்றி விளக்கமாக பேசுகிறது. ரகு வம்சத்தில் பிறந்தவர் ராகவன்; யாதவ வம்சத்தில் உதித்தவர் ராமன்; யது வம்சத்தில் பிறந்தவர் கண்ணன் என தெளிவுபடுத்துகிறது. மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் தான் மணக்குள விநாயகரானது என்ற புதிய செய்தி உள்ளது.
கீதையின் சாரத்தை தரும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்