குடும்ப அமைப்பு, உறவு, காதல் பிரச்னைகளை உளவியல் ரீதியாக அணுகும் நுால். ஒவ்வொரு குடும்பத்திலும் உறவு முறைகளை விவரிக்கிறது.
உறவுகளை நீட்டிக்க வழிமுறைகளை தருகிறது. கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர் சேர்ந்த அமைப்பு என்கிறது. ஒவ்வொரு உறவுகளை பற்றியும் கூறுகிறது. பிரச்னைகள் வந்தால் தீர்வு காணும் வழிமுறைகளை குறிப்பிட்டு சொல்கிறது.
சுற்றியுள்ள உறவுகள் சரியாக அமையவில்லை என்றால் மனச் சோர்வு ஏற்படும்; அதற்கு உரிய காரணத்தைக் கண்டுபிடித்து தீர்வை நோக்கி செல்ல வேண்டும் என அறிவுரைக்கிறது. உறவுகளை நீட்டிக்கவும், பிரச்னைகளை மென்மையாக தீர்க்கவும் உரிய வழிமுறைகளை தெரிந்து கொள்ள படிக்க வேண்டிய நுால்.
– ராம்