கலியுக தெய்வமாக அரங்கன் கோவில் கொண்டு திருவரங்கத்தில் இருப்பதன் பின்னணியில் சுவையான சரித்திரத்தை தரும் நுால்.
கிளிச்சோழனுக்கு, கிளி உருவில் சுக மகரிஷி உபதேசித்தது தொகுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கமே உயர்ந்தது என்பதையும், தீயோரை தண்டிக்கவும் நல்லோரைக் காக்கவும், மெய்யடியார் மனதில் தியானிக்கவும் இறைவன் அவதாரங்களை, யுகம் தோறும் எடுப்பதை கூறுகிறது.
ஆலிலையில் இருந்தவர் மகா விஷ்ணுவாக உருவெடுத்த விதம் மற்றும் பிரம்மாவின் படைப்பு தொழில் வரலாற்றை தெரிவிக்கிறது. ரங்கநாதர் பூலோகம் எழுந்தருளியதையும், காவிரிக்கரை சந்திரபுஷ்கரணி தடாக சிறப்பையும் விவரிக்கிறது. ஸ்ரீரங்க பெருமாளின் சிறப்பு பேசும் நுால்.
– கவி