போலீஸ் துறை உயர் அதிகாரியின் பணி அனுபவங்களை அள்ளித்தரும் நுால்.
தமிழக நிகழ்கால வரலாற்றின் முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது.
தமிழகத்தில் விடுதலைப்புலிகள் செயல்பாடு, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதாவுடன் பணிக்கால அனுபவங்கள், இலங்கை தமிழர் பிரச்னை, அதிகாரிகளுக்கு இடையே நிகழ்ந்த பனிப்போர் என முக்கிய தகவல்கள் பதிவாகியுள்ளன.
நக்சலைட் செயல்பாட்டை ஒடுக்கிய பின்னணி, சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளில் அதிகாரிகளின் அலட்சியம், முறையற்ற செயல்பாடுகள், அதிகாரிகளின் அகங்காரம், அதிகார துஷ்பிரயோகம் என தமிழகத்தின் மற்றொரு முகத்தைக் காட்டுகிறது.
ஆட்டோ சங்கர் வழக்கு போன்ற காவல்துறை நடவடிக்கைகள் சுவைபட விவரிக்கப்பட்டு உள்ளன. நேர்மையான உயர் அதிகாரியின் பணிக்கால அனுபவ நுால்.
– ஒளி